Saturday, December 11, 2010

பதிவுத் திருட்டு!

சமீபத்தில் நண்பர் LK அவர்கள் பதிவுத்திருட்டு என்று ஒரு பதிவு எழுதியிருந்தார்.அதில் நண்பர் ப.செல்வக்குமார் அவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் பார்த்ததில் என் பதிவில் இருந்து இரண்டு இடுகைகள் ‘மதுரையிலிருந்து’ஒரு பதிவரால் அவர் பதிவில் வெளியிடப் பட்டிருந்ததைப் பார்த்தேன்.இங்கு நான் திருட்டு என்ற சொல்லை உபயோகப் படுத்தவில்லை. நம்மிடமிருந்து ஒரு பொருளை மற்றவர் எடுக்கிறார் என்றால்,அவருக்கு அது மிகவும் பிடித்திருக்கிறது,அது மதிப்பு வாய்ந்தது என்றுதானே பொருள்.

என் பதிவு அவருக்கு மிகவும் பிடித்திருக்க வேண்டும்.அதில் சொல்லப்பட்ட கருத்து அதிகம் பேரைச் சென்று அடைய வேண்டும் என்று அவர் எண்ணியிருக்கலாம்.எனவே அதைத் தம் பதிப்பில் வெளியிடுவதன் மூலம் மேலும் பலர் பயன் பெறட்டும் என்று நல்லெண்ணத்தில் செயல் பட்டிருக்கலாம்.அவருக்கு நன்றி.

ஆனால் ஒரே ஒரு வருத்தம்!அப்பதிவுகளின் கடைசியில்,”மதுரை சொக்கனின் நமக்குத் தொழில் பேச்சு பதிவிலிருந்து” என்று ஒரு வரி சேர்த்திருக்கலாம்.தவறி விட்டார்.மறந்திருக்கலாம்.

நடந்தவை நடந்தவையாய் இருக்கட்டும்;இனி நடப்பவை நல்லவையாய் இருக்கட்டும்.

4 comments:

மதுரை சரவணன் said...

பதிவு திருட்டு என்பது குறித்து தங்கள் விளக்கம் எனக்கு பிடித்து இருக்கிறது.மேலும் ஒரு கட்டுரை எழுதும் போது ரெபரென்ஸ் என்று சொல்லுவது போலவும் குறிப்பிடலாம். பகிர்வுக்கு நன்றி . வாழ்த்துக்கள்.

மதுரை சொக்கன் said...

மதுரை சரவணன் said...

// பதிவு திருட்டு என்பது குறித்து தங்கள் விளக்கம் எனக்கு பிடித்து இருக்கிறது.மேலும் ஒரு கட்டுரை எழுதும் போது ரெபரென்ஸ் என்று சொல்லுவது போலவும் குறிப்பிடலாம். பகிர்வுக்கு நன்றி . வாழ்த்துக்கள்.//
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி மதுரை சரவணன் அவர்களே.தங்கள் யோசனை சரியானதே.

வார்த்தை said...

போயிட்டு போறாங்க "சின்னபுள்ளைங்க".

மதுரை சொக்கன் said...

@வார்த்தை
”பதிவுலகில் இதெல்லாம் சகஜமப்பா!”
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி