ஓம் நமசிவாய
மீண்டும் ஒரு நீண்ட இடைவெளி!
திருமூலர் இன்றுதான் மீண்டும் அழைத்திருக்கிறார்.
இன்றைய பாடல்--
”ஏற்றம் இரண்டுள ஏழு துரவுள
மூத்தான் இறைக்க இளையான் படுத்தநீர்
பாத்தியிற் பாயாது பாழ்ப்பாய்ந்து போயிடில்
கூத்தி வளர்த்ததோர் கோழிப்புள் ளாமே ”
நேரடியான பொருள் என்று பார்த்தால் மிக அற்பமான ஒரு செய்தியாகவே தோன்றும்
ஏழு கிணறுகள்,இரண்டு ஏற்றங்கள் உள்ளன.ஏற்றத்தில் மூத்தவன் நீர் இறைக்க, இளையவன் பாய்ச்ச ,நீர்,வயலுக்குப் பாயாமல் வெறுமனே சென்று கெடுமாகில்,அது பயனின்றிப் போகும்;எவ்வாறெனில்,ஒரு விலைமாது வளர்த்த பையனைப்போல.
இதன் மூலம் என்ன சொல்கிறார் திருமூலர்.?
இங்கு ஏழு துரவுள என்பது உடலில் உள்ள ஏழு சக்கரங்களை--மூலாதாரம்,சுவாதிட்டானம்,மணிபூரகம்,அநாகதம்,விசுத்தி,ஆக்ஞை,சகஸ்ராரம் என்பன--குறிக்கின்றது.
ஏற்றம் இரண்டுள என்பது மூச்சு இயங்கும் வழிகளான,இடகலை.பிங்கலை இரண்டையும் குறிக்கும்.
மூத்தான் இறைக்க என்பது ,இடகலை வழியாக(சந்திரகலை) மூச்சை வெளி விடுவதையும்,இளையான் படுத்த என்பது பிங்கலை(சூரியகலை) வழியாக மூச்சை உள்ளிழுப்பதையும் குறிக்கும்.
சாதாரணமாக மூச்சு அவ்வாறுதான் இயங்குகிறது.இதனால் சக்தி வீணாகிறது. பயனின்றிப் போகிறது.அவ்வாறன்றி.இவ்விரு கலைகளும் சமமாகப் பங்கேற்குமாறு, மூச்சு நடு நாடியாகிய சுழு முனையில் இயங்கினால்,ஞானமாகிய ஒளி பிறக்கும்.
கூத்தி வளர்த்ததோர் கோழிப் புள்ளாமே என்பதைப் பலவிதமாப் பலர் பொருள் கொண்டாலும்,அடிப்படைக் கருத்து அங்கு ஒன்றுதான்.-பயனின்றிப் போவது.
வேறு ஒரு உரையில் வேறு விதமாகவும் பொருள் கொள்ளப் பட்டுள்ளது.
ஏற்றம் இரண்டுள என்பது புண்ணிய பாவங்களைக் குறிப்பதாகவும்,ஏழு துரவுள என்பது சீவன் விரும்பும் ஏழு தோற்றங்களைக் --உடல்,மனம், தனம்,ராச்சியம்,உலகம்,உயர்வு ,சேவகம்-- குறிக்கும் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது.இந்த ஏழு ஆசைகளில் அல்லல்பட்டு மாயையில் உழலும் சீவனுக்கு உடையாளி யாரும் இல்லை, கணிகையின் மகனை யாரும் உடமை கொள்ளாதது போல் .
பஞ்சாட்சர தீப உரை விதமாகப் பொருள் கொள்கிறது.உயிர்ப்பின் செயலை நெறிப்படுத்தும் மூக்குத் துளைகளாகிய இரண்டு ஏற்றங்கள் உள்ளன.உடம்பின் ஆற்றல் குவிந்துள்ள கிணறுகள் ஏழுள்ளன.மூத்தவனாய ஆங்காரம் என்னும் தத்துவம் அம்மூச்சை நடத்துகிறது.அவ்வாங்காரத்தினின்று தோன்றிய மனம் விழைவு வடிவத்தில் நின்று அம்மூச்சுப் பயனை உலக விடயங்களில் சேர்ப்பிக்கின்றதுஇதனால் பெற வரும் நீர் போன்ற உயிர்ப்பு ஆற்றல்பயனை வளர்த்துகொள்ள உதவாமல் வீணே செலவாகின்றது.
15 comments:
மூச்சு பயிற்சி செய்வதன் நன்மைகளை சொல்லியிருக்கீங்க முயற்சி செய்து பார்க்குறேன். பகிர்வுக்கு நன்றி ஐயா.
//இங்கு ஏழு துரவுள என்பது உடலில் உள்ள ஏழு சக்கரங்களை--மூலாதாரம்,சுவாதிட்டானம்,மணிபூரகம்,அநாகதம்,விசுத்தி,ஆக்ஞை,சகஸ்ராரம் என்பன--குறிக்கின்றது.//
//இவ்விரு கலைகளும் சமமாகப் பங்கேற்குமாறு, மூச்சு நடு நாடியாகிய சுழு முனையில் இயங்கினால், ஞானமாகிய ஒளி பிறக்கும்//
பயனுள்ள தகவல்கள்.
ஏழு துரவுள என்பதற்கு ஏழு சக்கரங்கள் என்று பொருள் கொள்வதுதான் சரியானதென்று எனக்குப் படுகிறது. பிரமிக்க வைக்கிறார் திருமூலர். உங்களின் ஆழ்ந்த வாசிப்பனுபவத்தை தொடர்ந்து இதுபோல அள்ளி வழங்குங்கள். ஆவலுடன் பருகுகிறேன் நான்! நன்றி!
மூச்சிப் பயிற்சி பற்றி முழுவதுமாய் விளக்கம் மிகவும் அருமை ஐயா முயற்சிக்கிறேன் .
இவ்விரு கலைகளும் சமமாகப் பங்கேற்குமாறு, மூச்சு நடு நாடியாகிய சுழு முனையில் இயங்கினால்,ஞானமாகிய ஒளி பிறக்கும்.
ப்யன் நிறைந்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
பாடல் படிக்க சுலபமாக இருந்தாலும்,பொருள் நான் நினைத்தது போல் இல்லை. தங்களது விளக்கம் எளிய நடையில், எல்லோரும் புரிந்துகொள்ளும்படி இருக்கிறது.தொடரட்டும் உங்கள் பணி.
அவசியம் தொடர வேண்டிய பதிவாக தங்கள் பதிவு
இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது
ஜோதிடப் பாடப் பதிவுகள் தொடரலாமே
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
@ராஜி
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
@வை.கோபாலகிருஷ்ணன்
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
@கணேஷ்
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
@சசிகலா
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
@இராஜராஜேஸ்வரி
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
@வே.நடனசபாபதி
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
Ramani said...
//அவசியம் தொடர வேண்டிய பதிவாக தங்கள் பதிவு
இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது//
நன்றிi
// ஜோதிடப் பாடப் பதிவுகள் தொடரலாமே//
அதற்குத்தான் வாத்தியாரின் வகுப்பறை இருக்கிறதே?
அதுவும் தவிர நான் இன்னும் ஒரு சோதிட மாணவன்தான்.
நன்றி.
ஐயா! ஆன்மீகத் துறையில் பரந்த ஞானம் தங்கள் பால் நிரம்பி வழிவதை இக்கட்டுரை மூலம் கண்டேன்!களிமிக கொண்டன். நன்றி மேலும் தொடருங்கள் தொடர்ந்து வருவேன் சா இராமாநுசம்
Post a Comment