Tuesday, March 29, 2011

சூனிய சம்பாஷணை-பார்ப்பான் அகத்திலே

ஓர் ஊரில் ஒரு அந்தணன் இருந்தான்.அவனிடம் ஐந்து கறவைப் பசுக்கள் இருந்தன.நல்ல உயர்ந்த ரகப் பசுக்கள்.நன்கு,அதிகமாகப் பால் தரக்கூடிய பசுக்கள்.ஆனால் அப் பசுக்களை மேய்ப்பதற்கு எந்த விதமான எற்பாடும் அவன் செய்யவில்லை.அப்பசுக்கள் தம் மனம் போல தினமும் எங்கெங்கோ மேய்ந்து திரிந்து பாலைச் சொரிந்து விட்டு வீடு திரும்பி வந்தன . அப்பசுக்களின் பயன் அதன் உரிமையாளனுக்குக் கிடைக்காமல் போயிற்று. அப்பசுக்களைச் சரியான முறையில் தினமும் மேய்ப்பதற்கு அவன் ஏற்பாடு செய்திருந்தால் நல்ல பயன் அடைந்திருப்பான்.அந்தப் பசுக்கள் ஐந்தும் பாலாய்ச் சொரிந்திருக்கும்.

"பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரு மின்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரு முண்டாய் வெறியு மடங்கினால்
பார்ப்பான் பசுவைந்தும் பாலாச் சொரியுமே"--(திருமந்திரம்-2882)

ஆன்மா என்ற பார்ப்பானின் உடலில் ஐம் பொறிகளான கறைவைப் பசுக்கள் ஐந்து உள்ளன.-மெய்,வாய்,கண்,மூக்கு,செவி.அவை மேய்ப்பவர் இன்றி விருப்பம் போல் திரிவன.(புலன்கள் அடக்கப் படாமல் இன்பம் தேடி அலைகின்றன.)புலன் நுகர் பொருட்கள் மீதுள்ள ஆசையை அறுத்து இறைவன் பால் மனத்தைச் செலுத்தினால் பொறிகள் என்ற பசுக்கள் பேரின்பம் என்ற பாலைத் தரும்.

புலனடக்கம் என்பது என்ன?புலன்களின் இயற்கையான இயக்கத்தைக் கட்டுப்படுத்தி நிறுத்துவதா?அவ்வாறு அவற்றை அடக்கியே வைத்திருந்தால், அவை வீறு கொண்டு எழும்போது அவற்றைக் கட்டுப் படுத்த முடியாது போகும்.எனவே அவற்றை நெறிப் படுத்த வேண்டும்.இதையே பிரத்தியாகாரம் என்று சொல்வர். எனவே’மேய்ப்பாருமுண்டாய் வெறியுமடங்கினால்’ என்பதற்கு,அடக்கி நிறுத்துவது எனப் பொருள் கொள்ளாமல்,நன்னெறிப் படுத்துவது என்றே கொள்ளல் வேண்டும் .ஏனெனில்,திருமூலரே மற்றோர் இடத்தில் கூறுகிறார்---

“அஞ்சும் அடக்கு,அடக்கு என்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கு இல்லை;
அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே."

மற்றொரு பாடலில் சொல்கிறார்—

“தானே புலன் ஐந்துந் தன்வச மாயிடும்
தானே புலன் ஐந்துந் தன்வசம் போயிடும்
தானே புலன் ஐந்துந் தன்னில் மடைமாறும்
தானேதனித்தெம் பிரான்தனைச் சந்தித்தே”

இறைவனைச் சரணடைந்தால்,ஐந்து புலன்கள் வழியே செல்லும் மனம்,அவன் வசப்படும்.அப்போது ஐம்புலன்களின் சுவை கெடும்.அந்த ஐம்புலன்களே ஆன்மாவை இறைவழி இட்டுச்செல்லும்.

பார்ப்பான் என்பதற்கு பிரம்மா என்றும்,அகம் என்பது அவன் படைத்த உடல் என்றும் பொருள் கொள்வர்.

அந்தணன் ஒருவனிடம் பசு இருந்தால் அவன் மேய்க்க இயலாதவன்.அதற்கென ஒரு மேய்ப்பவனின் உதவி நாட வேண்டும்.அவ்வாறு செய்யாவிடில் பசுக்கள் இருந்தும் அவனுக்குப் பயனில்லை என்பதால், பார்ப்பான் என்று சொல்லப் பட்டது என்றும் சொல்வர்.

"சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு."-

என்ற திருக்குறள் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

28 comments:

ப.கந்தசாமி said...

நன்று.

மதுரை சொக்கன் said...

DrPKandaswamyPhD said...

//நன்று.//
நன்றி ஐயா!

எல் கே said...

அருமை. ரொம்ப நாளாக் காணோமேன்னு பார்த்தேன்

திவாண்ணா said...

நல்ல பதிவு!

மதுரை சொக்கன் said...

எல் கே said...

//அருமை. ரொம்ப நாளாக் காணோமேன்னு பார்த்தேன்//
மற்ற பதிவில் ஏதாவது எழுதித் தள்ளுவது எளிதாக இருக்கிறது!இங்கு எழுத உழைப்பு தேவைப்படுகிறது!
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி கார்த்திக்!

மதுரை சொக்கன் said...

திவா said...

// நல்ல பதிவு!//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திவா!

மதுரை சொக்கன் said...

Gopi Ramamoorthy said...

// நன்று//
நன்றி கோபி ராமமூர்த்தி அவர்களே!

geethasmbsvm6 said...

நல்லா இருக்கு. எல்கே சொன்னாப்போல் ரொம்ப நாட்கள்/மாதங்கள் ஆகிவிட்டன. நன்றிபகிர்வுக்கு.

ஒரு வேண்டுகோள்,

முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டினேன் பாடலுக்கும் பொருள் எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன். ஒரு மாதிரியா, ஒரு மாதிரியாத் தான் புரிஞ்சுக்கறேன். இருந்தாலும், சில சந்தேகங்கள்!

நன்றி.

geethasmbsvm6 said...

திருமந்திரம் மட்டும் தான் எழுதறீங்களோ???????

bandhu said...

அருமையான விளக்கங்கள். உங்களால் கொஞ்சம் தெரிந்து கொண்டேன்!

மதுரை சொக்கன் said...

geethasmbsvm6 said...

//நல்லா இருக்கு. எல்கே சொன்னாப்போல் ரொம்ப நாட்கள்/மாதங்கள் ஆகிவிட்டன. நன்றிபகிர்வுக்கு.//
மிக்க நன்றி!”நான் பேச நினைப்பதெல்லாம் “ என்று அதிகம் பேசிக் கொண்டிருப்பதால் இங்கு அதிகம் எழுதவில்லை.
ஒரு வேண்டுகோள்,

//முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டினேன் பாடலுக்கும் பொருள் எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன். ஒரு மாதிரியா, ஒரு மாதிரியாத் தான் புரிஞ்சுக்கறேன். இருந்தாலும், சில சந்தேகங்கள்! //
குருவி தலையில் பனங்காய்! இறை அருள் இருப்பின் முயல்வேன்!
நன்றி!

மதுரை சொக்கன் said...

geethasmbsvm6 said...

//திருமந்திரம் மட்டும் தான் எழுதறீங்களோ???????//
அதற்காகத்தான் இப் பதிவே ஆரம்பித்தேன்!இடையே வேறு சிலவும் எழுதியுள்ளேன்!

மதுரை சொக்கன் said...

bandhu said...

//அருமையான விளக்கங்கள். உங்களால் கொஞ்சம் தெரிந்து கொண்டேன்!//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

RVS said...

ஐயா முதன் முறை வருகிறேன்... நன்றாக இருக்கிறது... தொடர்ந்து எழுதுங்கள்... நன்றி. ;-)

மதுரை சொக்கன் said...

RVS said...

//ஐயா முதன் முறை வருகிறேன்... நன்றாக இருக்கிறது... தொடர்ந்து எழுதுங்கள்... நன்றி. ;-)//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி RVS!

Santhini said...

ஐயா, பார்ப்பான் என்றால் பார்ப்பவன் என்றும் பொருள் கொள்ளலாமோ ?

அப்பாதுரை said...

வியக்க வைக்கும் வரிகள். திருமந்திரமும் உங்கள் விளக்கமும். ரசித்துப் படித்தேன்.
இறைவனை இணைத்ததும் வியப்பு :)

மதுரை சொக்கன் said...

Nanum enn Kadavulum... said...

// ஐயா, பார்ப்பான் என்றால் பார்ப்பவன் என்றும் பொருள் கொள்ளலாமோ ?//

சூனிய சம்பாஷணையின் சிறப்பே அதுதான்!உங்கள் புரிதலைப் பொறுத்து வெவ்வேறு பொருள் தரும்!
நன்றி!

மதுரை சொக்கன் said...

அப்பாதுரை said...

//வியக்க வைக்கும் வரிகள். திருமந்திரமும் உங்கள் விளக்கமும். ரசித்துப் படித்தேன்.
இறைவனை இணைத்ததும் வியப்பு :)//

இறைவன் இணையாத இடம் உண்டோ?!

நன்றி அப்பாதுரை!

தக்குடு said...

தெளிவான விளக்கம்! நன்றிகள் பல!

தக்குடு
www.ummachikappathu.blogspot.com

மோகன்ஜி said...

அன்புள்ள சொக்கன் சார்! அப்பாதுரை வலை மூலம் உங்களை அறிந்து இங்கு வரும் வாய்ப்புக் கிட்டியது. அடியவனும் திருமந்திரத்தேன் மாந்தும் ரசிகனே. உங்கள் எழுத்து அற்புதமாய் இருக்கிறது. அடிக்கடி சந்திப்போம். வானவில்லுக்கு உங்களையும் வரவேற்கிறேன்

மதுரை சொக்கன் said...

தக்குடு said...

// தெளிவான விளக்கம்! நன்றிகள் பல!

தக்குடு
www.ummachikappathu.blogspot.co//

நன்றி தக்குடு!
உம்மாச்சி காப்பாத்து பார்க்கிறேன்!

மதுரை சொக்கன் said...

மோகன்ஜி said...

//அன்புள்ள சொக்கன் சார்! அப்பாதுரை வலை மூலம் உங்களை அறிந்து இங்கு வரும் வாய்ப்புக் கிட்டியது. அடியவனும் திருமந்திரத்தேன் மாந்தும் ரசிகனே. உங்கள் எழுத்து அற்புதமாய் இருக்கிறது. அடிக்கடி சந்திப்போம். வானவில்லுக்கு உங்களையும் வரவேற்கிறேன்//

நன்றி மோகன்ஜி !
வருகிறேன் வானவில்லுக்கு!

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

அருமையானதொரு வலைத்தளம் கண்டு
மகிழ்கிறோம் ஐயா..

ஐம்புலனை அடக்க முடியாது
அவற்றை மடைமாற்றம் தான் செய்ய
வேண்டும் என்பது
நமது அருளாளர்களின் கருத்து..

அருமை அருமை..
இதே ஐம்புலன்கள் குறித்து ஒரு தொடர் கட்டுரையும் எமது சிவயசிவ வலைதளத்தில் கடந்த வாரத்தில் எழுதியிருக்கிறேன்..

ஓய்விருக்குமபோது வருகைதாருங்கள் ஐயா..

நன்றி..

http://sivaayasivaa.blogspot.com

மதுரை சொக்கன் said...

@சிவ.சி.மா. ஜானகிராமன்
கருத்துக்கு நன்றி!உங்கள் வலைப்பூவை தொடர்வேன்!

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

அன்புடன் வணக்கம் மதுரை சொக்கன் ஐயா அவர்களே,

சிவயசிவ - வலைத்தளத்தில் இணைந்தமைக்கு மிக்க நன்றி..
தொடர்ந்து வருகை தந்து பின் ஊட்டமிட்டு ஊக்கம் தாருங்கள்..

தங்களது நண்பர்களுக்கும் இவ் வலைத்தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்..

நன்றிகள் பல...

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

cheena (சீனா) said...

அன்பின் மதுரைச் சொக்கன்

அழகான அறிவுரை கூறும் பதிவு - ஐம்புலன்களை அடக்கைனால் என்ன பலன் கிடைக்கும் என்பதனை விளக்கும் திருமந்திரப் பாடலின் விளக்கம் அருமை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

மதுரை சொக்கன் said...

நன்றி சீனா சார்