Monday, September 3, 2007

பக்தி

ஒரு நாள் ஞானியாரிடம் ஒருவன் கேட்டான்"சாமி,சிலர் கடவுளுக்காக பெரிய யாகம் எல்லாம் பண்றாங்க;நெறைய செலவு செய்யறாங்க.சிலர் ஒடம்பை வருத்தித் தவம் எல்லாம் செய்யறாங்க.;வெயில்,மழை,காத்து எதையும் பாக்கிறதில்லை.சிலர் ஏகாதசி,க்ருத்திகை,ஷஷ்டி,சனிக்கிழமை,வியாழக்கிழமை இப்படிப் பல நாட்கள் பட்டினி இருந்து கடவுளை வணங்குறாங்க.சிலர் கோவில் கோவிலாப் போயி வணங்கறாங்க.அங்கப்பிரதக்ஷிணம் செய்யறாங்க.என்னை மாதிரிச் சிலர் எதுவுமே செய்யாம வெறுமனே கும்பிடுறோம்.இறைவன் அருள் எல்லாருக்கும் ஒரே மாதிரியாக் கிடைக்குமா?"
ஞானி புன்முறுவலுடன் சொன்னார்"எதைச் செய்தாலும் உள் மனதில் மிகுந்த அன்போடு செய்ய வேண்டும்.இறைவனிடத்துக் காதலாகிக் கசிந்துருகிக் கண்ணீர் மல்கி அன்போடு அகம் குழைந்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.உடலை எவ்வளவு வருத்தினாலும்,உண்மையான அன்பு இல்லையெனில் பலன் இல்லை.நான் உங்களுக்கு கண்ணப்ப நாயனார்,சபரி ஆகியோர் பற்றிக் கூறியிருக்கிறேன் அல்லவா.அது போன்ற அன்பு வேண்டும்".
ஞானி மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார்

"என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போற் கனலில் பொரிய வறுப்பினும்
அன்போ டுருகி அகங்குழை வார்க்கன்றி
என்போல் மணியினை எய்தவொண் ணாதே"--(திருமூலர்)

6 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

நன்று சொன்னீர்கள்....

மதுரை சொக்கன் said...

நன்றி மதுரையம்பதி அவர்களே

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

ஐயா சொக்கன்,
எளிமையாக எழுதுகிறீர்கள்...நல்ல முயற்சி.
இன்னும் கருத்துரை ஆழமாக இருக்கலாம் என்பது என் விழைவு...
வாழ்த்துக்கள்...

மதுரை சொக்கன் said...

நன்றி,சங்கப்பலகை அவர்களே.திருமந்திரக்கருத்துக்களை இயன்ற அளவு எளிமையாக்கி அளிக்கவேண்டும் என்பதே என் நோக்கம்.எனினும் உங்கள் விழைவையும் கருத்தில் கொள்கிறேன்.

Indu said...

" Bakthi" was shorter and simpler than other stories, still it had it's essence. I usually read the poetry before I read the stories, just to see whether I get the meaning. I can catch a few meanings here and there. But when read the story and then the poetry I understand each and every word of the poem. That's the sole point of your writing!. Good work Mr Chokkan. Keep it up.

மதுரை சொக்கன் said...

நன்றி இந்து அவர்களே
// That's the sole point of your writing!//
மிகச்சரியாகச்சொல்லிவிட்டீர்கள்.நான் என் நோக்கத்தில் சிறிதாயினும் வெற்றி பெற்று விட்டேன் என உணர்கிறேன்.